Thirumoolar Tamil Chair for Yoga Research
Vanakkam!
- Medical University of South Carolina!
Tamil Chair, Inc. pledges $1.5 million to establish endowed chair at Hollings Cancer Center.
“Medical University of South Carolina Foundation is a 501(c)3 tax-exempt organization and your donation is tax-deductible within the guidelines of U.S. law. To claim a donation as a deduction on your U.S. taxes, please keep your email donation receipt as your official record.”
Please click the donate button or scan the QR code below to contribute to the Thirumoolar Chair. After clicking, select “Hollings Cancer Center – Thirumoolar Tamil Chair for Integrative Therapies Endowed Chair” from the options.
Please click here to join hands!
- Thirumoolar Tamil Chair
We request everyone to generously donate for this chair. We welcome everyone to support the Thirumoolar Tamil Chair and complete this project by providing the same great support that was given to the Harvard Tamil Chair and other endowed chairs of the Tamil Chair Inc organization.
Please click the donate button below to contribute to the Thirumoolar Chair. After clicking, select “Thirumoolar Tamil Chair” from the options.
Please click here to join hands!
அறிவிப்பு
வணக்கம்!
- அமெரிக்காவில் திருமூலர் தமிழ் இருக்கை!
- தென் கரோலின மருத்துவப் பல்கலைக் கழகத்தில் தமிழ் சித்தர் திருமூலர் பெயரில்!
- யோகம், மூச்சுப் பயிற்சிகளில் மருத்துவ ஆராய்ச்சி!
- மருத்துவப் பல்கலைக் கழகம் இணைக் கொடையளிக்க ஒப்புதல்!
- அனைவரும் நன்கொடை வழங்குவீர்!
- தன்னார்வலராக இணைவீர்!
- சித்தர்களின் மருத்துவத்தால் உலகை நலமுறச் செய்வோம்!
- தமிழ் சித்தர்களின் பெருமையைத் தரணியெங்கும் உயர்த்துவோம்!
- சித்தர்களின் மூலம் தமிழை உலகறியச் செய்வோம்!
அமெரிக்காவில் திருமூலர் தமிழ் இருக்கை
தமிழ் மருத்துவம்
தமிழ்ப் பண்பாட்டின் தலைசிறந்த மரபுக் கூறுகளுள் ஒன்று மருத்துவமாகும். இயற்கையோடு இயைந்த மருத்துவ முறையாக இது தொன்றுதொட்டுப் பேணப்பட்டு வருகிறது. தமிழ் மருத்துவத்தை உயரிய முறையில் உருவாக்கி, தொகுத்து நமக்கு அளித்தவர்கள் சித்தர் பெருமக்கள். இவர்கள் தம்முடைய வாலறிவின் மூலமாக எண்ணற்ற மருத்துவ முறைகளை நமக்குத் தந்திருக்கிறார்கள். இத்தகைய சித்தர் பெருமக்களில் ஒருவர் திருமூலர் ஆவார். இவர் திருமந்திரம் முதலான பல்வேறு நூல்களை எழுதியவர். திருமந்திரத்தில் பல்வேறு யோக முறைகளை நமது நல்வாழ்வுக்காக வழங்கியுள்ளார். இவற்றுள் தலையாயது அவரது மூச்சுப் பயிற்சி முறைகள் ஆகும்.
திருமூலர் பிராணாயாமம்
திருமந்திரத்தின் மூச்சுப் பயிற்சி முறைகளை அமெரிக்காவின் தென் கரோலினா மருத்துவப் பல்கலைக் கழகத்திலுள்ள கதிரியக்க மருத்துவத் துறையில் ஆராய்ச்சி செய்பவர் டாக்டர் சுந்தர் பாலசுப்ரமணியன் ஆவார். இவர், திருமூலர் மூச்சுப் பயிற்சியின் மூலமாக உடலில் உமிழ்நீர் சுரப்பைத் தூண்டலாம் என்பதையும், அத்தகைய உமிழ்நீரில் நமது நரம்பு மண்டலம், நோயெதிர்ப்பு மண்டலம், இரத்த ஓட்ட மண்டலம், சுவாச மண்டலம் ஆகிய யாவற்றையும் திறமாகச் செயல்பட வைக்கும் புரதங்களும் உயிர் மூலக்கூறுகளும் இருப்பதை முதன் முதலில் இக்கால மருத்துவ அறிவியல் முறையில் கண்டறிந்து வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து சித்தர்களின் மூச்சுப் பயிற்சி முறைகளை, மக்களின் நலம் காக்கவும், நோய்களிலிருந்து தேறுதல் பெறவும் தென் கரோலின மருத்துவப் பல்கலைக் கழகத்தில் பயன்படுத்தி வருகிறார். புற்றுநோய் முதலான நோய்களில் இவரது மூச்சுப் பயிற்சி ஆராய்ச்சி நடைபெற்றுவருகிறது.
திருமூலர் கூறும் மருந்து
தமிழ் சித்தர் மரபின் மருத்துவ மேன்மைகளை உலகம் அறியச் செய்வதும், மூச்சுப் பயிற்சிகளின் மூலமாக உலக மக்கள் யாவரும் நலமாக வாழலாம் என்பதை உலகிற்கு உணர்த்துவதும் நம் கடமையாகும். தமிழை ஒரு இலக்கிய மொழியாக மட்டுமன்றி, ஒரு மருத்துவ மொழியாகவும், நல்வாழ்வுக்கான பண்பாடாகவும் உலகிற்கு அறிமுகம் செய்யும் வாய்ப்பு இதன் மூலம் நமக்கு அமைகிறது. மருத்துவம், உடல்நலம், மனநலம் போன்றவற்றை ஒட்டியே இன்றைய உலகம் நகர்ந்து செல்வதை நாம் பார்க்கிறோம். இத்தகைய சூழலில் திருமூலரின் திருமந்திரம் மருந்து பற்றி என்ன கூறுகிறது என்பதைப் பார்க்கலாம்:
மறுப்பது உடல்நோய் மருந்தெனச் சாலும்
மறுப்பது உளநோய் மருந்தெனலாகும்
மறுப்பது இனிநோய் வாராதிருப்ப
மறுப்பது சாவை மருந்தென லாமே.
அதாவது, உடல்நோய், மனநோய், நோய்த் தடுப்பு, மேலும் நீடித்த வாழ்வு ஆகியவற்றை உள்ளடக்கியதே மருந்து என்கிறார் திருமூலர்.
அமெரிக்கா முன்வந்தது!
திருமூலரது பாடல்களையும், மற்ற சித்தர்களின் வழிமுறைகளையும் ஆராய்ந்து அவற்றின் மருத்துவக் கூறுகளை உலகிற்கு வழங்கவேண்டும் என்ற நோக்குடன், தென் கரோலின மருத்துவப் பல்கலைக் கழகத்தில் திருமூலர் தமிழ் இருக்கை அமையவுள்ளது. இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால், அப்பல்கலைக் கழகமே ஒரு இணைக் கொடையைத் தருவதாகவும் முன்வந்துள்ளது. இந்த நல்வாய்ப்பினைப் பயன்படுத்தி திருமூலர் தமிழ் இருக்கையினை அமைக்க தமிழ் இருக்கை அமைப்பு ஒரு உடன்பாடு செய்துள்ளது. நவம்பர் 11, 2024 அன்று இவ்வமைப்பு ஒரு இலட்சம் அமெரிக்க வெள்ளி ($100,000) நன்கொடை அளித்துள்ளது. சுமார் $1.5 மில்லியன் நன்கொடையில் அமையவிருக்கிறது திருமூலர் தமிழ் இருக்கை. அமெரிக்காவில் முதன்முறையாக மருத்துவத்திற்காக, தமிழ் சித்தர் ஒருவரின் பெயரில் ஒரு தமிழ் இருக்கை அமையவிருக்கிறது என்பது உலகத் தமிழர்களுக்குப் பெருமையல்லவா!
அனைவரும் இணைவோம் வாரீர்!
திருமூலர் தமிழ் இருக்கைக்காக அனைவரும் மனமுவந்து நன்கொடையளிக்க வேண்டுகிறோம். ஹார்வர்டு பல்கலைக் கழக இருக்கைக்கும், தமிழ் இருக்கை அமைப்பின் இதர இருக்கைகளுக்கும் வழங்கிய பெரும் ஆதரவை திருமூலர் தமிழ் இருக்கைக்கும் அளித்து இத்திட்டத்தை நிறைவேற்ற அனைவரையும் வரவேற்கிறோம். வரும் மாதங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் நிதி திரட்ட உங்கள் ஆலோசனையும் உதவியும் வரவேற்கப்படுகின்றன. டாக்டர் சுந்தர் பாலசுப்ரமணியனின் மூச்சுப் பயிற்சிப் பட்டறைகளை உங்கள் தமிழ்ச் சங்கம், அலுவலகம், பள்ளிக்கூடம், ஆலயங்கள் ஆகியவற்றில் ஏற்பாடு செய்து அதன் மூலம் நிதி திரட்டலாம். உலகெங்கிலும் இருக்கும் விருப்பமுள்ள தன்னார்வலர்கள் இதில் இணையுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இணைவதற்கான சுட்டி
Announcement
Vanakkam!
Thirumoolar Tamil Chair in the USA!
- In the name of the Tamil Siddhar Thirumoolar at the Medical University of South Carolina!
- Medical research in Yoga and Pranayama (yogic breathing)!
- Medical University agrees to matching donation!
- Everyone, please donate!
- Join as volunteers!
- Let’s heal the world with Siddha medicine!
- Let’s elevate the glory of Tamil Siddhars across the globe!
- Let’s make Tamil known to the world through the Siddhars!
Thirumoolar Tamil Chair in America
Medicine is one of the greatest traditional aspects of Tamil culture. The Tamil medical practice has been evolving since ancient times aligned with nature. The Siddhas (the enlightened ones) were the ancient scholars who created and compiled Tamil medicine in an excellent manner. They have given us countless medical methods through their profound wisdom. One such Siddha is Thirumoolar. He is the author of various texts, including the Thirumanthiram. In the Thirumanthiram, he has provided various yoga methods for our well-being. Chief among these are his breathing practices (pranayama).
Dr. Sundar Balasubramanian, who conducts research in the Department of Radiation Medicine at the Medical University of South Carolina in the United States, is researching the breathing exercises of the Thirumanthiram. He was the first to discover and publish, using modern scientific methods, that Thirumoolar’s breathing exercises can stimulate saliva secretion in the body, and that such saliva contains proteins and biomolecules that effectively regulate our nervous system, immune system, circulatory system, and respiratory system. Following this, he has been using the breathing exercises of various Siddhars at the Medical University of South Carolina to improve people’s health and aid recovery from illnesses. His pranayama research is being conducted in clinical conditions such as cancer to improve the quality of life of the patients and caregivers.
It is the duty of all of us to make the world aware of the medical excellence of the Tamil Siddha tradition and to convey to the world that all people can live healthily through breathing exercises. This gives us the opportunity to introduce Tamil to the world not only as a literary language but also as a medical tradition and a culture of well-being. We see that today’s world is moving around medicine, physical health, and mental health. In this context, let’s see what Thirumoolar’s Thirumanthiram defines as medicine:
“That which remedies bodily ailments is called medicine;
That which remedies mental ailments is said to be medicine;
That which prevents future ailments is medicine;
That which prevents death itself is medicine.”
With the aim of researching the methods of Thirumoolar and other Siddhars, and providing their medical benefits to the world, the Thirumoolar Tamil Chair is being established at the Medical University of South Carolina. Another special feature is that the university itself has come forward to provide a matching donation. Using this opportunity, the Tamil Chair Inc organization has made an agreement to establish the Thirumoolar Tamil Chair at the Medical University of South Carolina. On November 11, 2024, the organization donated $100,000 USD. The Thirumoolar Tamil Chair is planned to be established with a donation of approximately $1.5 million. It is a matter of pride for Tamils worldwide that a Tamil chair in the name of a Tamil Siddhar is being established for the first time in America for medical purposes.
Tamil Chair, Inc. pledges $1.5 million to establish endowed chair at Hollings Cancer Center.
We request everyone to generously donate for this chair. We welcome everyone to support the Thirumoolar Tamil Chair and complete this project by providing the same great support that was given to the Harvard Tamil Chair and other endowed chairs of the Tamil Chair Inc organization. Your suggestions and help in raising funds through various events in the coming months are welcome. You can raise funds by arranging Dr. Sundar Balasubramanian’s breathing exercise workshops in your Tamil Sangam, office, school, or temples. We cordially invite interested volunteers from around the world to join this effort.
Please click here to join hands!